Wednesday, September 11, 2019

ஈஷா நிறுவனமும் அதன் சமூகப் பணியும்


மிகச்சிறந்த பல்வேறு சமூகப் பணிகள் ஈஷா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் நான் அறிந்த பாராட்டுதலுக்குரிய சில முயற்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிராம சுகாதார மருத்துவமனை
-  ஈஷாவின் நடமாடும் கிராம சுகாரதார மருத்துவமனையின் மூலம் 20 லட்சம் கிராம மக்களை சென்றடைந்துள்ளனர்  
- நாளொன்றுக்கு சுமார் 60க்கும் மேற்பட்டோர் நடமாடும் கிராம சுகாரதார மருத்துவமனையின் மூலம் பயன் பெறுகின்றனர்

- அரசின் உதவியுடன் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

இயற்கை பேரிடர் மீட்பு
- கடலூரில் சுனாமி தாக்கிய பகுதிகளில் பேரிடர் நிவாரண மீட்பு நடவடிக்கைகள், சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம் ஆகியவற்றிலும் பேரிடர் நிவாரண மீட்பு நடவடிக்கைகள், மற்றும் இன்னபிற

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்   
https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

கிராமப்புர மக்களுக்கான திட்டங்கள்
- கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதார உருவாக்கம்/ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்

- அழிந்து வரும் கிராமப்புர கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஈஷா கிராமோத்சவம்

- கிராமப்புர பகுதிகளில் இலவச யோகா வகுப்புகள்
- ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பலருக்கு இலவச வீடுகள் மற்றும் இன்னபிற…
இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும் https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

பழங்குடியின/மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள்

- பழங்குடியினத்தவரின் திறன் அடிப்படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சிகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல்

- ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின கிராமப்புர மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள்

- பல்வேறு பழங்குடியின  குழந்தைகளுக்கு இலவசக் கல்வி

- பழங்குடியின கிராமப்புர மக்களுக்கு இலவச வீடுகள் மற்றும் கழிப்பிடம் கட்டித்தருதல்

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும் 
bit.ly/IshaTribals

சுற்றுச்சூழலுக்கான திட்டங்கள்

- 30 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு,நடப்பட்டு, அதன் பராமரிப்பு குறித்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

- தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் மரக்கன்றுகள் பராமரிக்கும் 35 க்கும் மேற்பட்ட நர்சரிகள்


இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://www.ishaoutreach.org/en/project-greenhands

இந்திய நதிகளை மீட்க
- 2017 ல் ஈஷா நிறுவனத்தால் நடத்தப்பட்ட நதிகளை மீட்போம் பிரச்சார இயக்கம் இந்திய அளவில் மிக்பெரிய வெற்றியடைந்தது. இந்தியா முழுவதுமுள்ள 16,2 கோடி மக்கள் அந்த இயக்கத்திற்கு தங்கள் ஆதரவினை அளித்தனர்

-  நதிகளை மீட்போம் இயக்கம் அளித்துள்ள கொள்கை வரைவை மாநில நதிநீர் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. 

- இந்த இயக்கத்தின் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வாகரி நதியை மீட்போம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் அம்மாநில அரசின் உதவியுடன் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. 

- நதிகளை மீட்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக காவேரியின் கூக்குரல் என்ற செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  காவிரி நதிப்படுகைகளிலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அந்த நதிப்படுகையில் வேளாண்காடுகளை உருவாக்குது..

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்: 
cauverycalling.org

விவசாயிகளுக்கானத் திட்டங்கள்
- தமிழக விவசாயிகளுக்கு பன்னிரண்டிற்கும் மேற்பட்ட இலவச இயற்கை விவசாயப்
- மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் ஆயிரக்கணக்கான பள்ளி நிறுவனங்களை ஈடுபடுத்தியுள்ளது

இவை குறித்த மிகசமீபத்திய ஊடக செய்தி: 
வெள்ளியங்கிரியில் பதிவு செய்யப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் "Farmers Producers Organisation (FPO) கடந்த நிதியாண்டில் 7,91 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட 100 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.ஈஷா யோகா மையத்தின் வழிகாட்டுதலில் 2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வெள்ளியங்கிரிப் பகுதியிலுள்ள தொண்டியமுத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள தென்னை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கிறது. அந்த விவசாயிகள் பயிரிட்டு விற்பனை செய்யும் தேங்காய்களின் அளவை பொறுத்து விலை கொடுத்து அதனை விற்பனையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இது சந்தைவிலையைவிட குறைவு. 400 விவசாயிகளுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் தற்போது 1063 பேர் உறுப்பினர்களாகியுள்ளனர் என்று வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலுள்ள குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கும் இந்த விவசாயிகளை ஒருங்கிணைப்பதில் கிடைத்துள்ள இந்த வெற்றி மகத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விக்கான திட்டங்கள்
- தமிழகம் மற்றும் ஆந்திராவின் 8000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது
- 1000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த தரமான கல்வி அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://www.ishaoutreach.org/en/isha-vidhya

இந்திய செய்தி ஊடகங்கள் இத்தகைய நல்ல முயற்சிகளை/திட்டங்கள் குறித்து வெளியிடுவதில்லை. அதேநேரத்தில், ஈஷா நிறுவனம் குறித்து வரும் எந்தவொரு குற்றச்சாட்டையும் உடனே வெளியிடுகின்றன.

ஈஷா நிறுவனம் குறித்த உண்மையை தெரிந்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த கட்டுரையில் நாங்கள் அளித்துள்ள விவரங்களின் மூலம் உண்மையான விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Embed This

No comments:

Post a Comment