Showing posts with label சிவராத்திரி. Show all posts
Showing posts with label சிவராத்திரி. Show all posts

Sunday, March 29, 2020

கொரானா வைரசும் மகாசிவராத்திரியும் – திட்டமிட்டு பரப்பப்படும் பொய் வதந்திகள் – உண்மை என்ன?

கடந்த பிப்ரவரி21 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரிக்கும் கொரான வைரஸ் தொற்றுக்கும் ஏதேனும் தொடர்ப்பு இருக்குமா?

இந்தக் கேள்விக்கான விடையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான், ஈஷாவின் மேல் சேற்றை வாரிப் பூசுவதற்கான மற்றுமொரு முயற்சி என்ற உண்மை புரிந்தது.

வைரஸ் தொற்று குறித்த அறிவியல் பூர்வமான உண்மைகள்

இந்த வைரஸ் தொற்று 14 நாட்களுக்குள் பரவும். அப்படியெனில், பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்வில் இந்த கொரானா தொற்று பரவியிருக்கும் எனில், மார்ச் 5 க்குள் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும். தொற்று 14 நாட்களுக்குள் வெளிப்பட்டுவிடும் என்ற நிலையில் மார்ச் 5 வரை இந்தியாவில், எந்தவொரு கொரான தொற்று நோயாளிகள் இருப்பதாக விவரங்கள் இல்லை, அப்படியிருக்க, இந்த வாதம் அடிப்படையிலேயே உண்மையற்றது.


மார்ச் மூன்றாம் வாரத்தில்தான் கொரான தொற்றில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் இந்தியாவில் நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
அதேபோல், மகாசிவராத்திரிக்கு வந்த வெளிநாட்டினருக்கு கொரானா தொற்று இருந்தால், இந்நேரம் ஆசிரமத்திலுள்ள சிலருக்காவது அந்த தொற்று பரவியிருக்கக்கூடும். ஆசிரமத்திலும், அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர் மற்றும் இந்தியர்கள் யாருக்கும் இதுவரை எந்தவொரு தொற்றும் கண்டறியப்படவில்லை. அதில் கலந்துகொண்ட எந்தவொரு முக்கியப் பிரமூகருக்கும் இந்த தொற்று இன்றுவரை கண்டறியப்படவில்லை.
மேற்கூறிய விவரங்களே மகாசிவராத்திரிக்கும் கொரானா தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மிகத்தெளிவாக, அறிவியல் பூர்வமாக உறுதிசெய்துள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை

பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே, சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டிலிருந்து மகாசிவராத்திரிக்கு வருகைதர பதிவு செய்திருந்தவர்களின் வருகைப் பதிவை ரத்து செய்து விட்ட ஈஷா மையம் அவர்கள் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துவிட்டது.
இதுகுறித்த விவரங்களை கீழ்காணும் சுட்டிகளில் காண்க:

எனவே, அந்த நேரத்தில் வைரஸ் தடைசெய்யப்பட்ட இந்த நாட்டு மக்களிடமிருந்து எந்தவொரு தொற்றுநோயும் மகாசிவராத்திரி விழாவின் மூலம் பரவியிருப்பதற்கான சாத்தியம் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.
இதுகுறித்து சீனாவிலுள்ள ஒரு ஈஷா தன்னார்வலரின் உருக்கமான வீடியோ பதிவை பாருங்கள்..


மகாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்வதற்கு மருத்துவ பரிசோதனை முன்நிபந்தனை

மேலும், மகாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டினர் அவர்களிக்கு இருக்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகள்/நோய் குறித்த விவரங்களை குறிப்பிடவும், குறிப்பாக, மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே விழாவில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் முன்நிபந்தனையாகும். இது வெறும் விழா காலத்தில் மட்டும் அல்ல, பிற ஈஷா பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.
அதுமட்டுமின்றி கடந்த மார்ச் 28 ஆம்தேதி அரசு சுகாதாரத்துறையினரால் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் முடிவில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதுகுறித்து தினமணியில் வந்த செய்தியின் விவரம் கீழ்காணும் சுட்டியில்:

எனவே, இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை மக்களிடம் பரப்பி, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையில் ஈஷா மையம் என்ன செயகிறது?


அதேநேரத்தில், ஈஷா தன்னார்வலர்கள் மக்கள் தொண்டாற்ற, மருத்துவர்களுடன் கரம்கோர்க்க வேண்டும் என்று சத்குரு அறிவுறுத்துகிறார். 

தேவைப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கான தேவைக்கு ஆசிரமத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என சத்குரு அறிவித்துள்ளார்.

https://www.livemint.com/news/india/covid-19-impact-isha-yoga-center-suspends-programmes-around-the-world-11584426007694.html


மட்டுமின்றி, ஈஷாவின் அனைத்து நிகழ்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்துள்ள ஈஷா அறக்கட்டளை, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் மருத்துவ பரிசோதனையும் செய்து வருகிறது.மக்கள் பணியில் வழக்கம் போல் தங்களை இணைத்துக்கொண்டு, அரசின் அனைத்து முன்முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் முதல் குரலாக ஈஷா மாறியுள்ள நிலையில், அதனை விரும்பாத வெகுசிலரின் வழக்கமான வெற்றுக் கூச்சலாகத்தான் இத்தகைய பதிவுகள் உள்ளன என்பதை மீண்டும் இத்தகைய பதிவுகள் நிரூபித்துள்ளன.


Sources:








Embed This

Tuesday, March 5, 2019

காஜல் அகர்வாலுக்கு முத்தமா? உண்மை என்ன?

காஜல் அகர்வாலுக்கு ஜக்கி வாசுதேவ் முத்தம் கொடுத்தாராம்!? 


இதென்னடா கீழ்த்தனமான நியூஸ் என்று உண்மையை விசாரித்து பார்த்தேன்.

இதுதான் அந்த அருவருப்பான மீம்:




இதுதான் அந்த முழு விடீயோவின் தொகுப்பு:



காதுதோடு நல்லா இருக்குன்னு சொன்னது, அங்கு மிகவும் சத்தமாக இருந்ததால், சரியாக கேட்காமல் அந்த பெண் சிறிது அருகில் வந்து கேட்டார். 

அந்த விடியோவை frame-freeze செய்து அதைவைத்து ஒருவர் பற்றி கீழ்த்தனமாக மீம்ஸ் போடுவது ஒரு மனநோய்.

காசுக்காக இப்படி மீம் செயகிறார்கள் என்றால் அதற்கு பதிலாக பிச்சையெடுத்து பிழைக்கலாம்! 

இன்னொரு விதமான கேடுகெட்ட கூட்டமும் நம்ம ஊருல அதிகாமாகிட்டு இருக்கு. இது இந்து கலாச்சாரமும், ஆன்மீகமும் வளரக்கூடாதுன்னு நினைக்கிற கூட்டம். அவனுங்கள திருத்த முடியலேன்னாலும் இந்துக்களாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

நம் குருமார்களை பற்றி அவதூறுகள் பரப்புவது மிகவும் சாதாரணமாக உள்ளது தமிழ்நாட்டில். இதற்கு சில இந்துக்களே புத்தியில்லாமல் துணைநிற்பது வேதனைக்குரிய விஷயம்தான்!

Embed This

Saturday, January 5, 2019

ஈஷா பவுண்டேஷனால் ஒலி மாசு ஏற்படுகிறதா? வதந்திகளும் .. உண்மைகளும்!!


2018 துவக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. யாரோ ஒருவர் அதனை வெளியிட்டிருந்தார். மகா சிவராத்திரி விழாவின்போது ஈஷா பவுண்டேஷன் அனுமதிக்கப்பட்ட ஒலி மாசின் அளவை மீறுகிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (Pollution Control Board - PCB) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக அந்த வீடியோ சொல்லிக்கொண்டது.  இப்படித்தான் ஆரம்பித்தது இந்த சர்ச்சை.

அதன் தொடர்ச்சியாக, ஒலியின் அளவான டெசிபல் குறித்து, சப்தம் குறித்து  அனைத்து அம்சங்களையும் படித்தேன். அவற்றில் பலவும் அறிவியல் பூர்வமற்றது என்பதையும் நான் கண்டுபிடித்தேன். மகாசிவராத்திரி குறித்து எத்தனை பொய்யான தகவல்கள் அளந்துவிடப்படுகின்றன!!?  இப்போது உண்மை விவரங்களைப் நாம் பார்ப்போம்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன சொல்கிறது?

அனுமதிக்கத் தக்க ஒலியின் அளவு 55 டெசிபல் என்றும், பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஒலியின் அளவு 80 டெசிபல் என்றும் அறிக்கை சொல்கிறது. அறிக்கையில் சொல்லப்படும் ஒலி அளவுகள் பலவும் 60 முதல் 70 டெசிபல் வரை இருக்கின்றன. 

அறிக்கையில் சொல்லப்படாதது என்ன?

அறிக்கை தெளிவாகச் சொல்லாத விஷயங்கள் இரண்டு:

(1) ஒலி எழும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் ஒலியின் அளவு கணக்கிடப்பட்டது?

(2) அந்தப் பகுதியில் ஒலியின் அளவு எவ்வளவு நேரம் நீடித்தது?

இவைகள் மிகவும் முக்கியமான தகவல்கள். ஆனால், அவை வேண்டும் என்றே குறிப்பிடப்படவில்லை. ஒலி பயணப்படும் தூரம் அதிகரிக்கும்போது, அதன் டெசிபல் அளவு குறைகிறது. ஒலி மாசுபாடு என்ற அத்துமீறல் இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டுமென்றால் இந்த இரண்டு அளவுகளையும் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும்.

இப்போது உண்மை விவரங்கள் குறித்து நாம் பேசுவோம்!

ஈஷா பவுண்டேஷன் எழுப்பியதாகச் சொல்லப்படும் ஒலியின் அளவு என்ன என்று புரிந்துகொள்வதற்காக, ஒலியின் சப்தம் குறித்த சில ஒப்பீட்டு எண்களைக் கீழே தருகிறோம்:

(1) வீட்டில் பயன்படுத்தப்படும் வேக்குவம் கிளீனர் 70-80 டெசிபல் ஒலியை எழுப்புகிறது.

(2) புல் வெட்டும் யந்திரம் ஒன்று, இயங்கும்போது 95 டெசிபல் ஒலியை எழுப்புகிறது. 

(3) கழிப்பறையில் நீர் ஊற்றிக் கழுவும்போது, அல்லது தொலைபேசியில் அழைப்பு வரும்போது எழுப்பப்படும் ஒலியின் அளவு 80 டெசிபல்!

(4) மிக்சி அல்லது அதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தும்போது 80 – 90 டெசிபல் ஒலி எழுகிறது. 

(5) இரைச்சல் மிகுந்த ஓர் உணவகத்தில் 80 டெசிபலுக்கு மேலான ஒலி எழுகிறது. 

இதனை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: http://chchearing.org/noise/common-environmental-noise-levels/

இந்த ஒலியின் அளவு உண்மையில் ஆபத்தானதா?

அனுமதிக்கப்பட்ட ஒலியின் அளவை விட எப்போதும், ஒருபோதும் அதிகமானதாக சப்தம் கேட்கக் கூடாது என்று சொல்வீர்கள் என்றால்… ஒரு குழந்தை அழும்போது 110 டெசிபல் அளவுக்கு ஒலி ஏற்படுகிறது! சிம்பொனி இசைக்கப்படும்போது 110 டெசிபல் அளவுக்கு ஒலி எழுகிறது!

ஒரு வாதத்துக்காக ஒரு விவரத்ததைச் சொல்வோம். 80 டெசிபல் என்பது மிக அதிகமான சப்தம் என்றால், சரி 85 டெசிபல் என்றுகூட வைத்துக்கொள்வோம். அதனை எவ்வளவு நேரம் கேட்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? 8 மணி நேரம். ஆமாம் நீங்கள் அதனை 8 மணி நேரம் தொடர்ந்து கேட்கலாம். 


"UK Health and Safety Executive" குறிப்பு என்ன சொல்கிறது என்று பாருங்கள். ஒரு நாளைக்கு 87 டெசிபலுக்கு மேலாக ஒலியின் அளவு போகக் கூடாது என்கிறது. அதேநேரத்தில், ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக வேலை நடக்கும் இடத்தில், அங்கு அதிக சப்தம் இருக்கும்போது 140 டெசிபல் வரை கூட இருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.  அந்த சப்தத்தில் 8 மணி நேரம் வரை நீங்கள் அங்கு இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.  நீங்களே கூட இதை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.


ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை பார்த்துள்ள எந்த ஒருவருக்கும், அதிக ஒலியை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் உச்சாடனங்களும் இசையும் தொடர்ந்து தொடரச்சியாக அதில் எழுப்பப்படுவதில்லை என்பது தெரிந்திருக்கும். தொடர்ந்து  ஒலி எழுப்பப்படும் நேரம் 15-20 நிமிடம்கூட அவை நீள்வதில்லை. அவ்வாறு எழுப்பபடுகின்ற அதிக ஒலி/இசைகளுக்கு இடையே  மிக நீண்ட நேரம் இடைவெளி இருக்கும். 

அச்சத்தைப் பரப்பும் விஷமிகள்

இந்த வேடிக்கையைக் கேளுங்கள்….  சப்தத்தின் அளவு காரணமாக பறவையின் முட்டை வெடித்துவிட்டது என்று காமெடியன் பியூஷ் சொல்கிறார்!
பறவைகள் ஒலிபெருக்கிக்கு உள்ளே முட்டையிடுவதில்லை. இல்லை என்பது பியூஸுக்கு தெரியவில்லை. அவரைக் காட்டிலும் அறிவான மூளை பறவைகளுக்கு இருக்கிறது! :)

அவர் சொல்வதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. மக்களை அச்சுறுத்துவதற்காக ஒலியின் காரணமாக கண்ணாடி உடையும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒலியைக் கொண்டு கண்ணாடியை உடைக்க வேண்டுமென்றால், 110 டெசிபலுக்கு ஒலியை ஏற்படுத்துவது மட்டுமல்ல ரெசொனேட்டர் கொண்டு சரியான ஒலி அலைகளை ஏற்படுத்த வேண்டும்! 


நிறைவுரை

ஈஷாவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப முயலும் சுயநலவாதிகளின் மக்கள் மத்தியில் பயத்தை பரப்பும் முயற்சிதான் இது என்பது தெளிவு.

மகா சிவராத்திரி, இயற்கைக்கும், நமக்கும், நம் உயிர்ப்புக்கும் இடையில் நிகழும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவம். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆன்மீக ஒளியை நம்மில் ஏற்ற, அலைகடலென திரளும் மக்கள் வெள்ளத்தின் ஆன்ம அலையை கண்டு மிரளும் விஷமிகளின் பொய்யான வதந்திகளை பொருட்படுத்தத் தேவையில்லை. குருவின் மடியில், சிவனின் அருள் மழையில நனைவதற்கு ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கெடுப்பது மிகவும் பாதுகாப்பானது.


Embed This