Tuesday, January 29, 2019

ஈஷா அறக்கட்டளை ஒரு லாப நோக்கில்லா நிறுவனம்தானா?

எதனால் ஈஷா அறக்கட்டளை ஒரு லாப நோக்கில்லா நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது?

ஈஷா அறக்கட்டளை ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தும், ஏன் அதன் வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கிறது என்ற கேள்வி நிறைய மக்களிடத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 

பெரும்பாலான மக்கள் இதை உண்மையாகத் தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் கேட்டாலும், சிலர் வேண்டுமென்றே குழப்பிவிட்டுத் தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் கேட்கிறார்கள்! 

ஆனால் இங்கு பிரச்சினையே, பெரும்பாலானவர்களுக்கு NPO (Non-Profit Organization - இலாப நோக்கில்லா நிறுவனம்) என்பதன் அடிப்படை வரையறையே தெரியாததுதான்!


NPO - லாப நோக்கில்லா நிறுவனம் என்றால் என்ன?


சரியான விளக்கத்திற்கு இந்த விக்கிப்பீடியா இணைப்பைத் திறந்து படிக்கவும்... https://en.wikipedia.org/wiki/Nonprofit_organization


"வணிகம் அல்லா நிறுவனம் என்றும், இலாப நோக்கில்லா அமைப்பு என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு இலாப நோக்கில்லா நிறுவனம் (NPO) என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாய நலனை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கோ அல்லது ஒரு ஒத்த கருத்து மற்றும் செயல்திட்டத்தைத் துணை நின்று ஊக்குவிக்கவோ அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

பொருளாதார விதிகளின் படி, ஒரு இலாபநோக்கில்லாத நிறுவனம் என்பது, தனது செயல்களுக்கான செலவு போக மீதியான வருவாயைத் தனது பங்குதாரர்கள், தலைவர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்காமல், அவைகளை மீண்டும் தங்களது உச்சபட்ச குறிக்கோளை அடைவதற்காக மட்டுமே பயன்படுத்தும் நிறுவனம்" என்று வர்ணிக்கப்படுகிறது.


NPO பணவசூல் மற்றும் வரி

"இலாபநோக்கில்லா நிறுவனங்கள் வரிவிலக்குப் பெற்ற அல்லது தொண்டு நிறுவனங்களாக அறிவிக்கப்படுகின்றன. அதாவது அவை தங்கள் நிறுவனத்திற்காகப் பெற்றுக் கொள்ளும் தொகைகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இந்த மாதிரியான ஒரு நிறுவனம் பொதுவாக ஆன்மீகம், அறிவியல், ஆராய்ச்சி அல்லது கல்வி போன்ற ஏதேனும் ஒரு அமைப்பாகச் செயல்படலாம். 

தங்களது நேரம், பொருள் மற்றும் நம்பிக்கை ஆகியவைகளைத் தன்னகத்தே அர்பணித்திருக்கும் ஒவ்வொரு தனி மனிதரிடத்திலும் காட்டப்படும் பொறுப்புடைமை, நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் திறந்த தன்மை ஆகியவையே இந்த நிறுவனங்களின் முக்கிய அம்சங்களாகும். 

இலாப நோக்கில்லா நிறுவனங்கள், தங்களுக்கு நன்கொடை வழங்குபவர்கள், நிதிஅளிப்பவர்கள், தன்னார்வத்தொண்டர்கள், நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள், பயன் பெறுபவர்கள் மற்றும் பொதுமனித சமுதாயம் ஆகிய அனைவருக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளன. 

இந்த நிறுவனங்கள் இலாப நோக்கில்லாமல் தங்களது சேவை நோக்கத்தில் எவ்வளவு தூரம் கவனமாக இருக்கின்றனவோ, அவ்வளவு தூரம் அவை பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன்மூலம் தங்கள் நல்நோக்கத்தைச் செயல்படுத்த அதிகத் தொகைகளைப் பெறமுடியும். " 

பின்வருபவைகளின் நுணுக்கமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானதாகும். அதனல் நாம் முதலில் இதன் வெவ்வேறுபட்ட அம்சங்களைப் பாப்போம். 


NPOவின் நுணுக்கங்கள் - நிதி திரட்டும் விதம்

ஒரு இலாபநோக்கில்லா நிறுவனம் இலாபமே ஈட்டாது என்ற ஒரு பொதுவான தவறான புரிதல் நிலவுகிறது. இலாபத்தை அதிகரிப்பது என்பது ஒரு இலாபநோக்கில்லா நிறுவனத்தின் தனிப்பட்ட குறிக்கோளாக இல்லாமல் இருந்தாலும்கூட அவை பொருளாதார நடைமுறைகளில், ஒரு பொறுப்பான பொருளாதார வணிகம் போலவேதான் இயங்க வேண்டும். 

அதாவது, தங்களது வருமானம் (மானியங்கள், நன்கொடைகள் மற்றும் தங்களது சேவைகளினால் வரும் வருமானங்கள்) மற்றும் செலவீனம் ஆகியவற்றை நிர்வகித்து, அதன்மூலம் தன்னை ஒரு பொருளாதார ரீதியில் நிலையான அமைப்பாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

தங்களது உச்சபட்சக் குறிக்கோளின் நோக்கத்தால் முழுவதுமாக பதிலீடு செய்து, பண்பட்ட வழிகள் மற்றும் பொறுப்பான பொருளாதாரம் போன்ற நற்குணங்களின் மீது கவனம் செலுத்திப் பயணிப்பது இலாபநோக்கில்லா நிறுவனங்களின் கடமை மற்றும் பொறுப்புமாகும்!

விக்கிப்பீடியா இணைப்பும் இதை இவ்வாறு கூறுகிறது: 

"இலாப நோக்கமில்லா நிறுவனங்கள் இலாபத்தை உருவாக்குவதால் உந்துதல் பெறுவதிவில்லை என்றாலும்கூட அவை அவற்றின் சமூக கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்குப் போதுமான வருமானத்தையும் உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளன. அவை தங்களது பணிகளுக்காகப் பல்வேறு வழிகளில் பணத்தை திரட்ட முடியும். இதில், தனிநபர் அல்லது நிறுவனம் சார்ந்த நன்கொடைகள், நிறுவனக் கூட்டமைப்புகளின் நிதிப் பங்களிப்பு, அரசாங்க நிதி உதவி, தங்களது நிகழ்ச்சிகள், சேவைகள் அல்லது பொருட்கள் விற்பனை மூலம் வரும் வருவாய்கள் மற்றும் முதலீட்டிலிருந்து வரும் வருமானம் ஆகியவை அடங்கும்." 

எனவே, இந்த விளக்கத்தின் முக்கியக் கருத்தானது, ஈஷா அறக்கட்டளை தங்களது பலவகைப்பட்ட நிகழ்ச்சிகள், தன்னார்வ நன்கொடைகள் மற்றும் தங்களது தயாரிப்புப் பொருட்கள் விற்பனைகள் போன்றவை மூலம், தாங்களே தங்களது நற்பணிகளுக்கான நிதியைத் திரட்டிக்கொள்ளும் செயல்முறையை மதிப்பிட்டுச் சரிதான் என்று நன்கு உறுதிப்படுத்துகிறது. 

அந்த பணத்தை வைத்து அவர்களது செயல்கள் அனைத்திற்கும் அவர்கள் நிச்சயமாக அரசாங்கத்திற்கு கணக்குக் கொடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயமாக, ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அதில் நன்கொடை அளிக்கிறார்கள்! மென்பொருள் உலகில் இருந்து இதற்கு ஒரு நெருங்கிய ஒப்புமை கொடுக்கவேண்டுமானால், "ஒரு திறந்த மென்பொருள் மூலம் என்பது இலவச மென்பொருள் மூலம் என்று அர்த்தம் ஆகிவிடாது அல்லவா?" அதைப் போலத்தான் இதுவும்.


NPOவிற்கு என்ன நோக்கங்கள் இருக்க முடியும்?

ஈஷா அறக்கட்டளையானது தனது ஆன்மீக முறைகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மனித உணர்வு நிலையை மேம்படுத்தும் பணிக்காகவே முக்கியமாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனமாகும். ஆனாலும் கூடவே இதனுடன் சேர்த்து மிகப் பெரிய அளவுகளிலான மற்ற சமூகநலத் திட்டங்களையும் ஈஷா நடத்தி வருகான்றது. 

அவை:

- கிராமப் புத்துணர்வு இயக்கம்
- ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்
- ஈஷா வித்யா, முதலியன

இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும், குறைந்தபட்ச வளங்களைக் கொண்டே செயல்படுத்தப்பட்டாலும் கூட, இவை சமுதாய நலனில் ஏற்படுத்தும் நல்விளைவுகள் அளவிட முடியாத அளவு மிகப் பிரம்மாண்டமாக இருக்கின்றன. 

ஈஷா அறக்கட்டளை விவசாயிகளுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் செய்யும் நன்மைகள் என்ன என்பதற்கு இந்த வலைதள இணைப்பில் சென்று பார்க்கவும்: http://kazhugupaarvai.blogspot.com/search/label/farmers


ஈஷா அறக்கட்டளை கிராமப்புறங்களில் கல்விக்காகச் செய்திருக்கும் பணிகள் என்னவென்பதை அறிந்துகொள்ள இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்: http://kazhugupaarvai.blogspot.com/search/label/Education

கல்வி இதன் பெரும்பணிகளில் ஒரு சிறு பகுதியாக இருந்தாலும் கூட இதற்காகப் பெருமளவு பணிகள் நடந்துள்ளன.


ஈஷா அறக்கட்டளை மரம் வளர்ப்பு வகையில் ஆற்றிய பணிகளைப் பற்றி அறிந்துகொள்ள இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்: http://kazhugupaarvai.blogspot.com/2017/03/isha-project-green-hands-scam-or.html


ஈஷா அறக்கட்டளை கிராமப்புற மக்களுக்கு ஆற்றும் பொதுவான பணிகளைப் பற்றி அறிந்துகொள்ள இந்த இணைப்பில் பார்க்கவும்: https://en.wikipedia.org/wiki/Action_for_Rural_Rejuvenation


ஈஷா அறக்கட்டளையின் முன்னெடுப்புகள் என்னென்ன?

பாராட்டத்தக்க சில முக்கிய முன்னெடுப்புகள் இங்கே (2017 முடிவில்):

- 2.2 மில்லியன் (22 லட்சம்) கிராமப்புற மக்களைச் சென்றடையும் நடமாடும் மருத்துவமனைகளைச் செயல்படுத்திக்கொண்டிருப்பது

- ஒவ்வொரு நாளும் சராசரியாக 60 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் கிராமப்புற நிரந்தரச் சுகாதார நிலையங்கள்

- மாநில முழுதும் நடத்தப்படும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

- கடலூர் சுனாமி, சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம் போன்ற பேரழிவுப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட சீரமைப்புப் பணிகள்

- கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள்

- அழிந்துகொண்டிருக்கும் கிராமியக் கலை மற்றும் விளையாட்டுகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழகம் மற்றும் ஆந்திராவில் செயல்படுத்தப்படும் ஈஷா கிராமோத்சவம் நிகழ்வுகள்

- 3 மில்லியனுக்கும் (30 லட்சம்) அதிகமான மரங்கள் விநியோகிக்கப்பட்டு, நடப்பட்டுக் கண்கானித்துப் பராமரிக்கப்படுவது

- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமான 35 க்கும் மேற்பட்ட நாற்றங்கால் நிலையங்கள்

- தமிழ்நாட்டில் டஜன் கணக்கில் நடத்தப்படும் விவசாயிகளுக்கான இலவச கரிம வேளாண் (இயற்கை வேளாண்மை) பயிற்சி அமர்வுகள்

- ஆயிரக்கணக்கான பள்ளிகளை மரங்கள் நட்டு ஊட்டமளித்து வளர்க்கும் பணிகளில் ஈடுபடுத்தியது

- கிராமப்புற தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 8000 த்திற்கும் அதிகமான மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது

- மாணவர்களுக்குச் சிறந்த கல்வி வழங்குவதற்காக அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பது

- கிராமப்புற பகுதிகளில் இலவச யோகா வகுப்புகள்

- கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இலவச வீடுகள் கட்டித்தருவது


எந்தப் பிரதான ஊடகமும் பொதுவாக இந்த நல்ல நிகழ்வுகளை வெளியிடுவதில்லை என்றாலும் இந்த மாதிரியான மிகப்பெரிய பிரம்மாண்ட அளவிலான சேவைகள் இந்த அமைப்பால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது (இதுவும் நான் இந்த அமைப்பை விரும்பும் காரணங்களில் ஒன்று).

இதனால் ஈஷா நிறுவனம், ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்திற்கான ஒரு விசேட ஆலோசகர் அந்தஸ்த்துப் பெற்றிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனலாம். 

மேலும் இந்நிறுவனத்திற்கு, இங்கே கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆட்சி/ அரசாங்க காலகட்டங்களிலும் கூடப் பல மத்திய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


NPOகளும் வரி விலக்கும்

இந்த மாதிரியான இலாபநோக்கில்லா நிறுவனங்கள் (NPO கள்) பொதுவாக வரி விலக்குப் பெற்றவை. அதாவது இந்த மாதிரி நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் வழங்கிய தொகைக்கான வருமான வரி விதிவிலக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனை அவர்கள் தங்களது வருமானத்திற்கான வரிவிலக்கு கோருவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அமைப்பின் இயல்பைப் பொறுத்து, வரிவிலக்கு 50% அல்லது 100% வரை கூட அளிக்கப்படும்.

அதற்காக இந்த மாதிரி இலாபநோக்கில்லாத நிறுவனங்கள் வருமான வரி ஆய்வுகளிலிருந்தே விலக்குப் பெற்றவை என்று அர்த்தம் இல்லை. இது நேரடியாகக் கீழே #4 க்கு இட்டுச் செல்கிறது.


NPOகளின் பொறுப்புடைமை மற்றும் நெறிமுறைகள்

அனைத்து இலாப நோக்கில்லா நிறுவனங்களும் (NPO களும்) எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வருமான வரி ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்ற விதிமுறைக்குக் கட்டுப்பட்டவையே.

இலாப நோக்கில்லா நிறுவனங்களின் தார்மீகப் பொறுப்பு மற்றும் நெறிமுறைகளின் மேல் ஒரு கவனத்தை வைத்திருக்க அரசாங்கங்கள் எடுத்துக்கொண்ட முக்கியமான வழிவகைகளில் இதுவும் ஒன்று.

ஒரு நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற நிலையை ஒருமுறை சம்பாதித்து விட்டது என்பதால் மட்டுமே, அது எந்த முட்டாள்தனத்தையும் செய்துகொண்டு அந்த நிலையையே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் அர்த்தமல்ல.

பின்வரும் சட்டங்கள் அல்லது இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகள், இந்த மாதிரியான அரசு சாரா நிறுவனங்கள் / இலாப நோக்கில்லா நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைவை:


  1. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19 (1) (சி) மற்றும் 30 பிரிவுகள், 
  2. வருமான வரிச் சட்டம் 1961, 
  3. பல்வேறு மாநிலங்களின் பொது அறக்கட்டளைச் சட்டம், 
  4. பொது சமூகச் சங்கங்களுக்கான பதிவு விதிகள், 1860,
  5. 1956 ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் 25 ஆம் பிரிவு (2013 ஆம் வருடத்திய நிறுவனங்கள் சட்டத்தின் புதிய வரைவின் படி, பிரிவு 8) 
  6. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 1976.


மேலும், பல ஆண்டுகளுக்கு (தசாப்தங்களுக்கு) முன்னரே, இந்திய அரசாங்கமானது, ஈஷா அறக்கட்டளை ஒரு இலாபநோக்கற்ற நிறுவனம் என்று, அதன் தகுதி மற்றும் அனைத்துச் சான்றுகளையும் நன்கு ஆய்வு செய்த பிறகு, அங்கீகரித்துள்ளது. அத்தகைய ஒரு நிலைக்கு விண்ணப்பிப்பது மற்றும் அங்கீகாரம் பெறுவது என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.


ஈஷா அறக்கட்டளையின் இலாப நோக்கற்ற நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு, நாம் எவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் மற்றும் எவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதை, இந்த விளக்கவுரை நன்கு தெளிவுபடுத்துகிறது என்று நம்புகிறோம். 

Embed This

No comments:

Post a Comment