2018 துவக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. யாரோ ஒருவர் அதனை வெளியிட்டிருந்தார். மகா சிவராத்திரி விழாவின்போது ஈஷா பவுண்டேஷன் அனுமதிக்கப்பட்ட ஒலி மாசின் அளவை மீறுகிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (Pollution Control Board - PCB) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக அந்த வீடியோ சொல்லிக்கொண்டது. இப்படித்தான் ஆரம்பித்தது இந்த சர்ச்சை.
அதன் தொடர்ச்சியாக, ஒலியின் அளவான டெசிபல் குறித்து, சப்தம் குறித்து அனைத்து அம்சங்களையும் படித்தேன். அவற்றில் பலவும் அறிவியல் பூர்வமற்றது என்பதையும் நான் கண்டுபிடித்தேன். மகாசிவராத்திரி குறித்து எத்தனை பொய்யான தகவல்கள் அளந்துவிடப்படுகின்றன!!? இப்போது உண்மை விவரங்களைப் நாம் பார்ப்போம்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன சொல்கிறது?
அனுமதிக்கத் தக்க ஒலியின் அளவு 55 டெசிபல் என்றும், பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஒலியின் அளவு 80 டெசிபல் என்றும் அறிக்கை சொல்கிறது. அறிக்கையில் சொல்லப்படும் ஒலி அளவுகள் பலவும் 60 முதல் 70 டெசிபல் வரை இருக்கின்றன.
அறிக்கையில் சொல்லப்படாதது என்ன?
அறிக்கை தெளிவாகச் சொல்லாத விஷயங்கள் இரண்டு:
(1) ஒலி எழும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் ஒலியின் அளவு கணக்கிடப்பட்டது?
(2) அந்தப் பகுதியில் ஒலியின் அளவு எவ்வளவு நேரம் நீடித்தது?
இவைகள் மிகவும் முக்கியமான தகவல்கள். ஆனால், அவை வேண்டும் என்றே குறிப்பிடப்படவில்லை. ஒலி பயணப்படும் தூரம் அதிகரிக்கும்போது, அதன் டெசிபல் அளவு குறைகிறது. ஒலி மாசுபாடு என்ற அத்துமீறல் இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டுமென்றால் இந்த இரண்டு அளவுகளையும் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும்.
இப்போது உண்மை விவரங்கள் குறித்து நாம் பேசுவோம்!
ஈஷா பவுண்டேஷன் எழுப்பியதாகச் சொல்லப்படும் ஒலியின் அளவு என்ன என்று புரிந்துகொள்வதற்காக, ஒலியின் சப்தம் குறித்த சில ஒப்பீட்டு எண்களைக் கீழே தருகிறோம்:
(1) வீட்டில் பயன்படுத்தப்படும் வேக்குவம் கிளீனர் 70-80 டெசிபல் ஒலியை எழுப்புகிறது.
(2) புல் வெட்டும் யந்திரம் ஒன்று, இயங்கும்போது 95 டெசிபல் ஒலியை எழுப்புகிறது.
(3) கழிப்பறையில் நீர் ஊற்றிக் கழுவும்போது, அல்லது தொலைபேசியில் அழைப்பு வரும்போது எழுப்பப்படும் ஒலியின் அளவு 80 டெசிபல்!
(4) மிக்சி அல்லது அதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தும்போது 80 – 90 டெசிபல் ஒலி எழுகிறது.
(5) இரைச்சல் மிகுந்த ஓர் உணவகத்தில் 80 டெசிபலுக்கு மேலான ஒலி எழுகிறது.
இதனை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: http://chchearing.org/noise/common-environmental-noise-levels/
இந்த ஒலியின் அளவு உண்மையில் ஆபத்தானதா?
அனுமதிக்கப்பட்ட ஒலியின் அளவை விட எப்போதும், ஒருபோதும் அதிகமானதாக சப்தம் கேட்கக் கூடாது என்று சொல்வீர்கள் என்றால்… ஒரு குழந்தை அழும்போது 110 டெசிபல் அளவுக்கு ஒலி ஏற்படுகிறது! சிம்பொனி இசைக்கப்படும்போது 110 டெசிபல் அளவுக்கு ஒலி எழுகிறது!
ஒரு வாதத்துக்காக ஒரு விவரத்ததைச் சொல்வோம். 80 டெசிபல் என்பது மிக அதிகமான சப்தம் என்றால், சரி 85 டெசிபல் என்றுகூட வைத்துக்கொள்வோம். அதனை எவ்வளவு நேரம் கேட்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? 8 மணி நேரம். ஆமாம் நீங்கள் அதனை 8 மணி நேரம் தொடர்ந்து கேட்கலாம்.
"UK Health and Safety Executive" குறிப்பு என்ன சொல்கிறது என்று பாருங்கள். ஒரு நாளைக்கு 87 டெசிபலுக்கு மேலாக ஒலியின் அளவு போகக் கூடாது என்கிறது. அதேநேரத்தில், ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக வேலை நடக்கும் இடத்தில், அங்கு அதிக சப்தம் இருக்கும்போது 140 டெசிபல் வரை கூட இருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு. அந்த சப்தத்தில் 8 மணி நேரம் வரை நீங்கள் அங்கு இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது. நீங்களே கூட இதை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை பார்த்துள்ள எந்த ஒருவருக்கும், அதிக ஒலியை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் உச்சாடனங்களும் இசையும் தொடர்ந்து தொடரச்சியாக அதில் எழுப்பப்படுவதில்லை என்பது தெரிந்திருக்கும். தொடர்ந்து ஒலி எழுப்பப்படும் நேரம் 15-20 நிமிடம்கூட அவை நீள்வதில்லை. அவ்வாறு எழுப்பபடுகின்ற அதிக ஒலி/இசைகளுக்கு இடையே மிக நீண்ட நேரம் இடைவெளி இருக்கும்.
அச்சத்தைப் பரப்பும் விஷமிகள்
இந்த வேடிக்கையைக் கேளுங்கள்…. சப்தத்தின் அளவு காரணமாக பறவையின் முட்டை வெடித்துவிட்டது என்று காமெடியன் பியூஷ் சொல்கிறார்!
பறவைகள் ஒலிபெருக்கிக்கு உள்ளே முட்டையிடுவதில்லை. இல்லை என்பது பியூஸுக்கு தெரியவில்லை. அவரைக் காட்டிலும் அறிவான மூளை பறவைகளுக்கு இருக்கிறது! :)
அவர் சொல்வதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. மக்களை அச்சுறுத்துவதற்காக ஒலியின் காரணமாக கண்ணாடி உடையும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒலியைக் கொண்டு கண்ணாடியை உடைக்க வேண்டுமென்றால், 110 டெசிபலுக்கு ஒலியை ஏற்படுத்துவது மட்டுமல்ல ரெசொனேட்டர் கொண்டு சரியான ஒலி அலைகளை ஏற்படுத்த வேண்டும்!
நிறைவுரை
ஈஷாவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப முயலும் சுயநலவாதிகளின் மக்கள் மத்தியில் பயத்தை பரப்பும் முயற்சிதான் இது என்பது தெளிவு.
மகா சிவராத்திரி, இயற்கைக்கும், நமக்கும், நம் உயிர்ப்புக்கும் இடையில் நிகழும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவம். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆன்மீக ஒளியை நம்மில் ஏற்ற, அலைகடலென திரளும் மக்கள் வெள்ளத்தின் ஆன்ம அலையை கண்டு மிரளும் விஷமிகளின் பொய்யான வதந்திகளை பொருட்படுத்தத் தேவையில்லை. குருவின் மடியில், சிவனின் அருள் மழையில நனைவதற்கு ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கெடுப்பது மிகவும் பாதுகாப்பானது.
Embed This
No comments:
Post a Comment