ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமானது, ஈஷா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் திட்டம். மரம் நடுவதன் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை 10% அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், அதே நோக்கத்தில், தமிழகத்தில் மட்டும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் பங்களிப்போடு, 2.80 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை வெற்றிகரமாக நட்டு வளர்த்துள்ளது.
2006ம் ஆண்டு, ஒரே நாளில் 2.5 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு 8,56,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனையில் இத்திட்டம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் விருதான "இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார்" (Indira Gandhi Pariyavaran Puraskar) விருது பசுமைக் கரங்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.
மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் நலத் துறையால் வழங்கப்பட்ட 2010ம் ஆண்டிற்க்கான சுற்றுச்சூழல் (“Environmental Award - 2010”) விருதையும் பசுமைக் கரங்கள் திட்டம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும், கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் பசுமைப் பரப்பை அதிகப்படுத்துவதற்காக முழுமுனைப்புடன் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக, அரசுடனும், தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், பெருநிறுவனங்கள் போன்றவைகளுடனும் இணைந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பல முயற்சிகளிலும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் ஈடுபட்டு வருகிறது.

Embed This
No comments:
Post a Comment