Monday, February 27, 2017

ஈஷா குற்றசாட்டுகள் - பகுதி 1

கடந்த சில மாதங்களாக ஈஷா யோகா மையம் மீது தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. முப்பது வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் ஒரு மையம் மீது திடீரன்று ஏன் எவ்வளவு குற்றசாட்டுகள் வந்தது என்பதை நான் ஆராய்ந்த பொது தான் சில திடுக்கிடும் உண்மைகள் புலப்பட்டன.

குற்றம் சுமத்துவார்கள்  ஒரு சிலரே, அவர்களும் ஒரு குழுவாக சேர்ந்து இதனை செய்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தகவல்கள் எப்படி இணையத்தின் வாயிலாக பகிர பட்டதோ அதே யுக்தியை இவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

ஈஷா, வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது!


இன்னும் இவ்வளவு நாட்களுக்கு தான் இந்த பழம் பொய்யையே சொல்ல போகிறார்கள் ?
ஈஷா யோக மையம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பட்டா நிலத்தில் மட்டுமே செயல்படுகிறது. உண்மையை சொல்லப்போனால், இங்கு ஈஷா வந்தபின் வன ஆக்கிரமிப்பு குறைந்து, மறைந்து போயிருக்கிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் நடைபெற்று வந்த சட்டவிரோதமான செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், ஈஷா மையத்திற்கு சில எதிரிகள் உருவாகி உள்ளனர். இவர்கள் ஈஷாவை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
வனத்துறை நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதா என்கிற கேள்விக்கு வனத்துறையே பதில் தந்துள்ளது. மண்டல வனப்பாதுகாப்பு காவலர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் ஈஷா வளாகத்தை ஆய்வுசெய்தனர். அதன்பின், முதன்மை வனப் பாதுகாவலருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஈஷா யோக மையம், பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் ஈஷா செய்யவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (Document reference number: CFCIT/07/2013)
இதுபற்றி ஈஷா மையம் பலமுறை விளக்கம் அளித்ததையும் பொருட்படுத்தாமல், ஒருசிலர் தொடர்ந்து இதுபற்றியே பேசிவருவது,மதிப்பிற்குரிய அரசுத்துறையை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது.


குறிப்பு: எனக்கும் ஈஷாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... இந்த தகவல் அனைத்தும் இணையத்தில் உள்ளன.

Embed This

No comments:

Post a Comment