கடந்த பிப்ரவரி21 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரிக்கும் கொரான வைரஸ் தொற்றுக்கும் ஏதேனும் தொடர்ப்பு இருக்குமா?
இந்தக் கேள்விக்கான விடையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான், ஈஷாவின் மேல் சேற்றை வாரிப் பூசுவதற்கான மற்றுமொரு முயற்சி என்ற உண்மை புரிந்தது.
வைரஸ் தொற்று குறித்த அறிவியல் பூர்வமான உண்மைகள்
இந்த வைரஸ் தொற்று 14 நாட்களுக்குள் பரவும். அப்படியெனில், பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்வில் இந்த கொரானா தொற்று பரவியிருக்கும் எனில், மார்ச் 5 க்குள் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும். தொற்று 14 நாட்களுக்குள் வெளிப்பட்டுவிடும் என்ற நிலையில் மார்ச் 5 வரை இந்தியாவில், எந்தவொரு கொரான தொற்று நோயாளிகள் இருப்பதாக விவரங்கள் இல்லை, அப்படியிருக்க, இந்த வாதம் அடிப்படையிலேயே உண்மையற்றது.
மார்ச் மூன்றாம் வாரத்தில்தான் கொரான தொற்றில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் இந்தியாவில் நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
அதேபோல், மகாசிவராத்திரிக்கு வந்த வெளிநாட்டினருக்கு கொரானா தொற்று இருந்தால், இந்நேரம் ஆசிரமத்திலுள்ள சிலருக்காவது அந்த தொற்று பரவியிருக்கக்கூடும். ஆசிரமத்திலும், அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர் மற்றும் இந்தியர்கள் யாருக்கும் இதுவரை எந்தவொரு தொற்றும் கண்டறியப்படவில்லை. அதில் கலந்துகொண்ட எந்தவொரு முக்கியப் பிரமூகருக்கும் இந்த தொற்று இன்றுவரை கண்டறியப்படவில்லை.
மேற்கூறிய விவரங்களே மகாசிவராத்திரிக்கும் கொரானா தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மிகத்தெளிவாக, அறிவியல் பூர்வமாக உறுதிசெய்துள்ளது.
சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை
பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே, சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டிலிருந்து மகாசிவராத்திரிக்கு வருகைதர பதிவு செய்திருந்தவர்களின் வருகைப் பதிவை ரத்து செய்து விட்ட ஈஷா மையம் அவர்கள் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துவிட்டது.
இதுகுறித்த விவரங்களை கீழ்காணும் சுட்டிகளில் காண்க:
எனவே, அந்த நேரத்தில் வைரஸ் தடைசெய்யப்பட்ட இந்த நாட்டு மக்களிடமிருந்து எந்தவொரு தொற்றுநோயும் மகாசிவராத்திரி விழாவின் மூலம் பரவியிருப்பதற்கான சாத்தியம் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.
இதுகுறித்து சீனாவிலுள்ள ஒரு ஈஷா தன்னார்வலரின் உருக்கமான வீடியோ பதிவை பாருங்கள்..
மகாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்வதற்கு மருத்துவ பரிசோதனை முன்நிபந்தனை
மேலும், மகாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டினர் அவர்களிக்கு இருக்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகள்/நோய் குறித்த விவரங்களை குறிப்பிடவும், குறிப்பாக, மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே விழாவில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் முன்நிபந்தனையாகும். இது வெறும் விழா காலத்தில் மட்டும் அல்ல, பிற ஈஷா பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.
அதுமட்டுமின்றி கடந்த மார்ச் 28 ஆம்தேதி அரசு சுகாதாரத்துறையினரால் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் முடிவில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதுகுறித்து தினமணியில் வந்த செய்தியின் விவரம் கீழ்காணும் சுட்டியில்:
எனவே, இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை மக்களிடம் பரப்பி, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் ஈஷா மையம் என்ன செயகிறது?
தேவைப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கான தேவைக்கு ஆசிரமத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என சத்குரு அறிவித்துள்ளார்.
https://www.livemint.com/news/india/covid-19-impact-isha-yoga-center-suspends-programmes-around-the-world-11584426007694.html
மட்டுமின்றி, ஈஷாவின் அனைத்து நிகழ்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்துள்ள ஈஷா அறக்கட்டளை, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் மருத்துவ பரிசோதனையும் செய்து வருகிறது.மக்கள் பணியில் வழக்கம் போல் தங்களை இணைத்துக்கொண்டு, அரசின் அனைத்து முன்முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் முதல் குரலாக ஈஷா மாறியுள்ள நிலையில், அதனை விரும்பாத வெகுசிலரின் வழக்கமான வெற்றுக் கூச்சலாகத்தான் இத்தகைய பதிவுகள் உள்ளன என்பதை மீண்டும் இத்தகைய பதிவுகள் நிரூபித்துள்ளன.
Sources:
Embed This