Monday, February 27, 2017

ஈஷா குற்றசாட்டுகள் - பகுதி 2

ஈஷா யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது!


யானை வழித்தடம் அல்லது யானை வலசைப் பாதை என்பது யானைகள் வசிக்கும் இரண்டு வனங்களை இணைக்கிற பாதையாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத் துறையால் யானை வழித்தடம் என்று குறிப்பிட்டுள்ள 88 யானைப் பாதைகளில் ஈஷா இல்லை. சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி யார் வேண்டுமானாலும் இது பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மழை பற்றாக்குறையே யானை ஊருக்குள் வருவதற்கான உண்மையான காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் நீர் மற்றும் உணவை தேடி யானைகள் ஊருக்குள் வருகின்றன. கும்கி திரைப்படம் பார்த்த அனைவருக்குமே இது நன்றாக புரிந்திருக்கும். ஈஷாவை சுற்றியுள்ள இடங்களில் கரும்பு, வாழை போன்றவை பயிரிடப்பட்டுள்ளன, இவை அனைத்தும் யானைகளை ஈர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. வேறு ஏதோ பகுதியில் இறந்த யானையின் புகைப்படத்தை எடுத்து, போலி குற்றசாட்டுகளை இவர்கள் பரப்பி வருகின்றனர்.

யானைக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் இடையூறான பகுதிகளை பார்த்தால் அவை ஈஷாவில் இருந்து பல மயில்கள் அப்பால் உள்ளது.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தமிழ்நாடு அரசு வன அதிகாரிகளிடம் இதைப்பற்றி முறையாக விசாரணை செய்யலாம்.


குறிப்பு: எனக்கும் ஈஷாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... இந்த தகவல் அனைத்தும் இணையத்தில் உள்ளன.

Embed This

No comments:

Post a Comment