Tuesday, January 29, 2019

ஈஷா பவுண்டேஷன் வனஅழிப்பு செய்தது பொய் குற்றச்சாட்டு : கூகுள் எர்த் ப்ரோ மூலம் நிரூபணம்


கூகுள் எர்த் ப்ரோவைப் பயன்படுத்தி ஈஷா பவுண்டேஷனின் வன அழிப்பு பற்றிய பொய் அம்பலப்படுத்தப்பட்டதுஈஷா பவுண்டேஷன் எந்த வனத்தையும் அழிக்கவில்லை என்று நிரூபிப்பதற்காக, இந்த பிளாக்கில் வெளியான எனது முந்தைய பதிவில் போதுமான வாதங்களை முன்வைத்துள்ளேன்.

பவுண்டேஷன் சார்பாக மிகத் தெளிவான விளக்கம் இந்தப் பக்கத்தில் வெளியாகியுள்ளது: https://isha.sadhguru.org/in/en/blog/article/truth-isha-yoga-center-elephant-corridor

தவறான தகவலைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட  படங்களை முதலில் ஆய்வு செய்யலாம் என்று தீர்மானித்தேன். அப்படங்களில் மிகவும் பரவலாக அறியப்பட்ட படம் கீழே இருக்கிறது:




அந்தப் படத்தின் இடது பக்கம் செழுமையான பச்சையாக இருக்க அதோடு ஒப்பிடப்பட்ட வலது பக்கத்தில் உள்ளவை பழுத்துப் போன /  பழுப்பேறிய பச்சை நிறத்தில் இருக்கின்றன. இதில் ஏதோ ஒரு விஷயம் / சூட்சுமம் பதுங்கி இருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது.  எனவே, கூகுள் எர்த் ப்ரோவைத் தரவிறக்கம் செய்து நானே அந்தப் படங்களைப் பார்த்தேன். கீழே உள்ளது ஈஷா மையத்தை மட்டும் காட்டும் கூகுள் எர்த் ப்ரோ 2006 படமாகும்.


அதனை குற்றம்சாட்டுவோர் ஆதாரமாகத் தந்த படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.



அந்தப் படங்களின் நிறத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலே, ஈஷா மலைகளை அழிக்கிறது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று புரிந்துவிடும். அதற்கு பெரிய அறிவாளி மூளையெல்லாம் தேவையில்லை!

ஈஷா யோக மையத்தினைக் குற்றம்சாட்டும் 2006 படமும் அதற்கு  இணையாக கூகுள் எர்த்தின் உண்மையான படமும் கொடுக்கப்பட்டுள்ளன.




குற்றம் சாட்டும் படத்தில் மலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. பண்ணை நிலங்களும் கூட பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. ஆனால், உண்மையான கூகுள் எர்த் ப்ரோவின் படத்தில் பண்ணை நிலங்கள் அவற்றின் உண்மையான வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. 

2006ன் படம் செழுமையான பச்சையாகத் தெரிகிறது என்றால், பச்சை வண்ண பில்டர் (green filter) முழுப் படத்துக்கும் பயன்படுத்தப்பட்டு அப்படியான தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இதனைத் தவிர வேறு வழியேதும் இல்லை.

இப்படியாக, மிக எளிமையான போட்டோ ஷாப் வேலையைச் செய்து முழு மனித குலத்தையும் ஏமாற்றும் வேலையை யாரே ஒருவர் பார்த்திருக்கிறார் என்பது தெளிவு! மேலும்,  குற்றச்சாட்டுவர்கள் பதிவு செய்துள்ள படத்தில் காட்டியுள்ளது போல 2006 படம் இருக்கவில்லை.


இது 2011ல் ஈஷா யோக மையத்தை மட்டும் காட்டும் படமாகும். அதன்பின், யோகா மையம் அருகே உள்ள இடங்களை விலைக்கு வாங்கி விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை எந்த ஒருவரும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அது சரி. ஆனால், அதில் எங்கே வனப் பகுதி இருக்கிறது?




இப்போது, நாம் ஈஷா யோகா மையத்தைக் காட்டும் 2016 கூகுள் எர்த் ப்ரோ  படத்தை எடுத்துக்கொள்வோம்.




குற்றம் சாட்டுபவர்கள் அளிக்கின்ற 2016 படத்தையும் கூகுள் எர்த் ப்ரோ படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் முன்பு பார்த்த அதே விஷயம் மறுபடியும் வருகிறது.





படங்களின் நிற வேறுபாடுகளைக் கவனியுங்கள். ஈஷா யோகா மையத்தின் இடது பக்கத்தில் உள்ள செழுமையான பச்சை நிறம் குற்றம் சாட்டுபவர்களின் படத்தை வைத்துத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2006ன் உண்மையான படமும், 2016ன் கூகுள் எர்த் ப்ரோ படமும் இவ்வாறு காட்சியளிக்கின்றன:




கவனிக்க வேண்டிய மூன்று அம்சங்கள்:

#1 – செயற்கை கோளிலிருந்து அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தை ஒட்டி அந்தப் படங்கள் இரண்டு வகைப்பட்ட சாயல்களில் தெரிகின்றன.

#2 -  ஈஷா பவுண்டேஷன் வளாம் வலது பக்கத்தில் மட்டுமே விரிவாகியிருக்கிறது. அதாவது, பிரதானமாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன பகுதியில் மட்டுமே விரிவாக்கம் நடந்துள்ளது.

#3 – இந்த இரண்டு உண்மையான படங்களும் ஈஷா யோகா மையத்தின் 2006 – 2016  என்று சொல்லப்படுகின்ற படங்களிலிருந்து வேறுபட்டவை.
 

இந்தப் படங்களைக் கவனமாகப் பாருங்கள். பொய்யான படங்கள் அளிக்கும் விவரங்கள் உங்களை ஏமாற்றுவதை உணருங்கள்.  மரியாதைக்குரிய ஒரு நிறுவனத்தின் நல்ல பெயரைச் சிதைப்பதற்காக இதுபோன்ற போலிப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உணருங்கள்.

'கூகுள் எர்த்' படங்கள் என்று சொல்லப்பட்ட படங்களைப் பதிவிட்டு ஈஷா மையம் வனங்களை அழிக்கிறது என்ற பேச்சை ஆரம்பித்து வைத்தவர், பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்துவிட்டார் என்பதை நான் இதற்கு முன்பே எனது பிளாக் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.  ஈஷா வன அழிப்பில் ஈடுபடவில்லை என்று அவர் ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.





இப்போது நீங்கள் உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள் என்பதால், இந்தப் பதிவைப் பரவலாகக் கொண்டு செல்லுங்கள். எந்த நியாய உணர்ச்சியுமின்றி பொய்களைப் பரப்புபவர்களைத் தடுத்து நிறுத்த இந்தப் பதிவைப் பரப்புங்கள்.


Embed This